கடந்த, 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழறிஞரான ஜி.யு.போப்புக்கு, பிரிட்டன் நாட்டின் ஆக்ஸ்போர்டு மாநகரில் கல்லறை உள்ளது. பிரிட்டன் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், ஜி.யு.போப்பின் கல்லறையில் அஞ்சலி செலுத்தினார்.
தெலுங்கானாவின் ஹைதராபாத சிட்டி போலீசில் குதிரை வீராங்களை படைப்பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், இடம்பெற்றுள்ள பெண் போலீசார், குதிரை மீதேறி நின்று சல்யூட் அடித்தனர்.
நேபாளத்தில் உள்ள நேவார் சமூகத்தில் ஒரு சிறுமியை தேர்ந்தெடுத்து அவரை தெய்வீக சக்தி படைத்தவராக வணங்குவது வழக்கம். அந்த வழக்கத்தின்படி காத்மாண்டு நகரின் ஹனுமான் தோக்கா அரண்மனையில் நேற்று நடந்த குமாரி பூஜை விழாவில் தேர்வு செய்யப்பட்ட சிறுமி.
தேனி மாவட்டம் கம்பத்தில் நடந்த மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் அ.தி.மு.க., பிரசார கூட்டத்தில் பொதுச்செயலாளர் பழனிசாமி பேசினார், அருகில் தேனி மேற்கு மாவட்ட செயலாளர் ஜக்கையன்.