கடலூர் ஆல்பேட்டை தென்பண்ணையாற்று பாலத்தில் மின்விளக்கு பொருத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த லைட்டுகளை மர்ம நபர் லைட்டுகளை தூக்கி ஆற்றில் போட்டு விட்டார். அதை ஊழியர்கள் கயிறு மூலம் மேலே தூக்கினர்.
பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் பெறுக வனத்துறை சார்பில் காரமடை அருகே உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையத்தில் பழங்குடியின மக்களின் நடனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தெலுங்கானாவின் ஹைதராபாத சிட்டி போலீசில் குதிரை வீராங்களை படைப்பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், இடம்பெற்றுள்ள பெண் போலீசார், குதிரை மீதேறி நின்று சல்யூட் அடித்தனர்.
கடந்த, 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழறிஞரான ஜி.யு.போப்புக்கு, பிரிட்டன் நாட்டின் ஆக்ஸ்போர்டு மாநகரில் கல்லறை உள்ளது. பிரிட்டன் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், ஜி.யு.போப்பின் கல்லறையில் அஞ்சலி செலுத்தினார்.