தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி அருகே ஆலந்தா கிராமத்தில் தோட்டத்தில் பயிரிட்ட தடியங்காய் காய்களுக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் காய்களை பறிக்காமல் தோட்டத்திலேயே விட்டு விட்டனர்.
முகத்துவாரம் பகுதியில் கடல்நீர் கலக்கும் இடத்தில் உள்ள மணல்களை தூர்வாரி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள நீர்வளத்துறை ஊழியர்கள்.இடம் : சீனிவாசபுரம்
மாவட்ட அளவில் பொதுமக்கள் பிரிவுக்கான முதல்வர் கோப்பை பெண்கள் வாலிபால் போட்டி கோவை ஈச்சனாரி கற்பகம் பல்கலையில் நடந்தது. இதில் ஏ.பி.சி., பொள்ளாச்சி புளூ ஸ்டார் அணிகள் மோதின.
கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக கிராமப்புறங்களில் உள்ள குளம் குட்டைகளில் நீர் வரத்து அதிகரித்து மீன்கள் அதிகம் உள்ளதால் இறை தேடி வந்த பறவைகள். இடம் காரமடை.