உலகத் தமிழ்ச் சங்கம் மற்றும் கோவை வேளாண் பல்கலை இணைந்து நடத்திய அறிவியல் தமிழ் தேசியக் கருத்தரங்கில் பழந்தமிழ் இலக்கியங்களின் கலைச்சொற்களும் நவீன தொழில்நுட்பஉலகமும் கட்டுரை நூல் தொகுப்பினை அமைச்சர் சாமிநாதன் வெளியிட்டார். அருகில் (இடமிருந்து) தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை அருள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தலைவர் பாலகிருஷ்ணன், உலக தமிழ்ச்சங்க இயக்குநர் பர்வீன் சுல்தானா, வேளாண் பல்கலை துணைவேந்தர் (பொ) தமிழ்வேந்தன், உதவி பேராசிரியர் செங்கோட்டையன் உள்ளிட்டோர்.
விழுப்புரத்தில் தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் உலக வெறி நோய் தின விழிப்புணர்வு பேரணியை டி.ஆர்.ஓ., ஹரிதாஸ் துவக்கி வைத்தார்.
உலக இருதய தினத்தை முன்னிட்டு, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவம சார்பில் நடந்த விழிப்புணர்வு பேரணியை மருத்துவமனையின் டீன் கீதாஞ்சலி துவக்கி வைத்தார்.
புதுச்சேரி சுகாதார மற்றும் குடும்ப நல வழித் துறை ரேபிஸ் நோய் தடுப்பு திட்டம் சார்பில் வெறிநாய் கடி குறித்து ஆட்டோ பிரச்சாரத்தை சுகாதாரத்துறை இயக்குனர் தொடக்கி வைத்தார்.