பசுக்களை பாதுகாக்கும் நோக்கில் அதற்கு, 'ராஜமாதா' என அங்கீகாரம் அளிக்கும் படி, ராஜஸ்தானில் இளைஞர்கள் பேரணியாக சென்று வலியுறுத்தினர். இடம்: ஜெய்ப்பூர்.
எவ்வளவு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினாலும் இது போன்றவர்களை என்ன செய்வது... சென்னை மந்தைவெளி பகுதியில் இருசக்கர வாகனத்தில் பள்ளி சிறுவர்கள் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டனர்.
பஞ்சாபில் பயிர் கழிவுகளை விவசாயிகள் எரிப்பதால் ஏற்படும் புகையில், டில்லி வரை காற்று மாசுபடுகிறது. இதை தவிர்க்கும்படி அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் எதையும் பொருட்படுத்தாமல் பஞ்சாபின் அமிர்தசரசில் பயிர் கழிவுகளை எரித்த விவசாயி.
நவராத்திரி விழா வரும் செப்டம்பர் 22ல் துவங்குகிறது. அப்போது வீடுகளில் அகல் விளக்கு ஏற்றுவது வழக்கம். இதற்காக களிமண் விளக்குகளை தயார் செய்து உலர வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மண்பாண்ட கலைஞர். இடம்: பிரயாக்ராஜ், உபி
உலக கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு கடலோர காவல் படை அதிகாரிகள், தன்னார்வலர்கள் மற்றும் மாணவ மாணவிகள் சென்னை எலியட்ஸ் கடற்கரையில் தூய்மை பணியினை மேற்கொண்டனர். இடம் : பெசன்ட் நகர்