இன்றைய போட்டோ
இன்றைய போட்டோ10-Dec-2025

2/
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரின் மையப்பகுதியில் ஓடும் ஜீலம் நதி நீர் நிறைந்து காணப்படும். ஆனால், தற்போது வறண்டுள்ளது. காஷ்மீர் பகுதியில் நிலவும் தீவிர வறட்சி மற்றும் பருவநிலை மாற்றத்தின் தாக்கமே இதற்கு காரணம் எனக்கூறப்படுகிறது. உள்ளூர் மக்கள் வாழ்க்கையிலும், பொருளாதாரத்திலும் ஜீலம் நதிக்கு முக்கிய பங்கு உள்ளதால், இது கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
10-Dec-2025

3/

4/
தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உடனடியாகஉதவி வழங்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது பிங்க் பெட்ரோல் போலீஸ் வாகனம். இதில் ஓட்டுபவர் முதல்சிறப்பு உதவி ஆய்வாளர் வரை அனைவரும் பெண்களாக இருப்பர். பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த வாகனங்களில் அதிகாரிகள் வலம் வருவர். பெண்களும் தயக்கமின்றி இவர்களிடம் புகார் தருவர். அந்த வாகனத்தை ஓட்டுபவரும், அதில் பயணிப்பவரும் ஆண்களாகவே இருந்தனர். இன்று( டிச.,10) இது பிங்க் பெட்ரோல் வாகனத்தின் அசல் நோக்கத்தையே சிதைப்பதாக உள்ளதே. இடம்: கோவை காந்திபுரம் காவல்நிலையம்
10-Dec-2025

5/

6/
சென்னை அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரம் பகுதியில் தேங்கியிருந்த மணல் திட்டுகளை தூர்வாரி தண்ணீர் செல்ல வழி செய்யும் பணி நீர்வளத்துறை சார்பில் நடந்தது. தற்போது அந்த பகுதி முழுவதும் தூர்வாரப்பட்ட எவ்வளவு மழை வந்தாலும் கடலுக்குள் செல்லும் வகையில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இடம்: பட்டினப்பாக்கம்.
10-Dec-2025

7/
தமிழக கடலோர பகுதிகளில் கடந்தாண்டு ஆயிரக்கணக்கில் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின . இதற்கு மீன்பிடி வலைகள், விசைப்படகுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு காரணங்களாக கூறப்படுகிறது. சமீப காலமாக மீண்டும் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி வருகின்றன. இந்த நிலையில் மெரினா கடற்கரையில் கரை ஒதுங்கிய ஆமை.
10-Dec-2025

8/
9/

10/

