நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகை கொண்டாட்டத்திற்கு மக்கள் தயாராகி வருகின்றனர். குஜராத்தின் பாரம்பரிய 'கர்பா' எனப்படும் விளக்கு வட்ட நடனப்பயிற்சியில் ஈடுபட்ட பெண் கலைஞர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரத்தில் உள்ள கெங்கையம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சிரசு திருவிழா நடைபெறும். அந்த வகையில் நடந்த சிரசு ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
சர்வதேச வாழும் கலை மையத்தின் 45வது ஆண்டு விழா மற்றும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜியின் 70வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், ஹரியானா கவர்னர் ஆஷிம் குமார் கோஷ், உடன் ரவிசங்கர் குருஜி.