ஜம்மு காஷ்மீரில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. இதனால், ஆப்பிள் உள்ளிட்ட சரக்குகளை காஷ்மீரில் இருந்து ஏற்றிச் சென்ற லாரிகள், நாள் கணக்கில் வரிசைக்கட்டி நிற்கின்றன.
கோவை சிவானந்த காலனி மாநகராட்சி வணிக வளாகத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள பொருட்கள், இதனால் நடை பாதையை பயன்படுத்த முடியாமல் பாதசாரிகள் அவதிப்படுகின்றனர்.
மதுரை பெட்கிராட் சார்பில் பெண்களுக்கான சணல் பொருட்கள் பயிற்சி முகாமை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் சண்முகசுந்தரம் துவக்கி வைத்தார். வலமிருந்து நிர்வாக இயக்குனர் சுப்புராம், மேலாளர்கள் மகேஸ்வரன், சரவணன், பொருளாளர் சாராள் ரூபி.