வட மாநிலங்களில் நடைபெற உள்ள துர்கா பூஜை எவ்வளவு பிரபலமோ அந்த அளவிற்கு துர்கா தேவியை இடம் பெறச் செய்யும் பந்தலும் முக்கியமானது. கல்வியை வலியுறுத்தும் வகையில் புத்தகங்களை அடுக்கி வைத்தது போல அமைக்கப்பட்டுள்ள பந்தல். இடம்: ராஞ்சி, ஜார்க்கண்ட்
நவராத்திரி விழாவை முன்னிட்டு இந்து அறநிலை துறை சார்பில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு கொலு அலங்காரங்களை ஆர்வத்துடன் பார்வையிட்ட மக்கள்
நவராத்திரி துவங்கியதை முன்னிட்டு காரமடை எஸ்விஜி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கொலு வைத்து வழிபட்டனர். இதில் மாணவி சரஸ்வதி மற்றும் கிருஷ்ணர் பாடல்களை பாடி அசத்தினர்.
நம் அண்டை நாடான நேபாளத்தில் சமீபத்தில் மாணவர் போராட்டத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அங்கு நடந்தது போலவே தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சிலும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகின்றன. இடம்: மணிலா, பிலிப்பைன்ஸ்