பஞ்சாபில் பயிர் கழிவுகளை விவசாயிகள் எரிப்பதால் ஏற்படும் புகையில், டில்லி வரை காற்று மாசுபடுகிறது. இதை தவிர்க்கும்படி அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் எதையும் பொருட்படுத்தாமல் பஞ்சாபின் அமிர்தசரசில் பயிர் கழிவுகளை எரித்த விவசாயி.
கம்பிகளுக்குள் கானகத்து மயில்.! கோவை மாநகராட்சி வ.உ.சி., உயிரியல் பூங்காவில் இருந்த பறவைகளும் விலங்குகளும் மாற்று இடத்துக்கு அனுப்பப்பட்ட பின்பும் கானகத்து மயிலுக்கு களம் மாற பிடிக்கவில்லை போல
திருப்பூர், த.வெ.க தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பாலமுருகன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் ஆய்வு மேற்கொண்டார். கட்சி தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் பூ வியாபாரிகளை சந்திக்க முடியாமல் தினறல்.