குப்பைமேடு கோபுரம் ஆகும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.! சில ஆண்டுகளுக்கு முன் குப்பைமேடாக காட்சியளித்த இந்த இடம் மாநகராட்சியால் மூடப்பட்டு பசுமை புல் வெளிகள் அமைக்கப்பட்டு, சுற்றுப்புற சூழல் கொண்டு சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ள இடம்: சாய்பாபா காலனி பகுதியில் குப்பை சேகரிக்கும் மையமாக இருந்த இடம் என சொன்னால் நம்புங்கள் வாசகர்களே.!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழா முன்னிட்டு, வீதி உலா வரும் விநாயகர் தேரை தீயணைப்புத் துறை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்தனர்.
சர்வதேச சைகை மொழி தினத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில், நடந்த பேரணியில், விழிப்புணர்வு பதாகை உடன் மாணவர்கள் ஊர்வலமாக வந்தனர்.
கோவை அரசு கலைக் கல்லூரி புவியியல் துறை சார்பில் கல்லூரி அரங்கில் கண்காட்சி நடந்தது. இதில் இடம் பெற்றிருந்த பொருட்கள் குறித்து சக மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.