ராமாயணத்தில் ராவணனை ராமர் வெற்றி கொண்ட நாள் விஜயதசமி. அந்நாளில் ராவணன், அவரது சகோதரர் கும்பகர்ணன், மகன் மேக நாதன் ஆகியோரின் உருவ சிலைகள் பொதுவெளியில் எரிக்கப்படும். இது வட மாநிலங்களில் கொண்டாடப்படும் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வு. இதற்கான சிலைகளுக்கு இறுதி வடிவம் கொடுத்த கலைஞர். இடம்: போபால், மத்திய பிரதேசம்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூர் பகுதியில் உள்ள காஞ்சி சங்கர மடத்திற்கு அசாம் மாநிலத்தில் இருந்து பிஜிலி என்ற 5 வயது பெண் யானை வந்தது. மடத்தில் உள்ள மையத்தில் யானை பராமரிக்கப்படும் என அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அனந்த் சதுர்தசி தினத்தில் விநாயகர் விசர்ஜனம் எனப்படும் சிலைகளை கடலில் கரைக்கும் நிகழ்வு மஹாராஷ்டிராவின் மும்பையில் நடந்தது. அதில் வண்ணப்பொடிகள் தூவி கொண்டாட்டத்துடன் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்ட பிரமாண்ட விநாயகர் சிலை.
புதுச்சேரி உள்ளாட்சித் துறை தூய்மை பாரத இயக்கம்-நகர்ப்புறம் 2.0 திட்டத்தின் கீழ் கம்பன் கலை யரங்க வளாகத்தில் கல்லூரி மாணவிகளுக்கான கோலப்போட்டி நடந்தது.
விவசாய கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாய சங்கங்களின் பாதுகாப்பு இயக்கம் மற்றும் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் திருவோடு ஏந்தி போராட்டம் நடத்தப்பட்டது.