பி.ஆர்.ஓ., எனப்படும் எல்லை சாலை அமைப்பு சார்பில், லடாக்கின் மிக் லா பாஸ் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 19,400 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள, உலகின் உயரமான சாலையில், கட்டுமான பணியாளர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.