திருவள்ளூர் ஊத்துக்கோட்டை சாலை அம்பேத்கார் நகர் பகுதியில் ,ஆந்திர மாநிலம் கூடூர் பகுதியில் இருந்து நான்கு குடும்பங்கள் பூ எடுத்துச் செல்ல ஏதுவாக மூங்கில் கூடை தயார் செய்து விற்பனைக்கு வைத்துள்ளனர்.
திருவள்ளூர் ஊத்துக்கோட்டை சாலை பூண்டி நீர்த்தேக்கம் கரையில் சதுரங்கப்பேட்டை சுற்றுலாத்துறை சார்பில் உணவகம் அமைக்கப்பட்டு முதல் நாள் மட்டும் திறக்கப்பட்டு இன்று வரை திறக்காமல் பூட்டு போட்டுள்ளனர்
வனப்பகுதியில் புதுசா ரிசார்ட் கட்டியிருக்கானு நினைச்சுக்காதீங்க, பல ஆண்டு போராட்டத்துக்கு பின், மண் குடிசையில் வாழ்ந்த பழங்குடியின மக்களுக்கு புதிதாக கான்கிரீட் வீடு கட்டி கொடுத்திருக்கு தமிழக அரசு. இடம்: டாப்சிலிப், பொள்ளாச்சி.
இந்திய கடலோர காவல் படை சார்பில், எண்ணெய் கசிவு பேரிடர் மற்றும் தீ விபத்தை கட்டுப்படுத்தும் ஒத்திகை சென்னை கடற்பகுதியில் நடந்தது. இதில் கடலோர காவல் படையின் 'சமுத்திரா பிரஹாரி' கப்பல், மற்றொரு கப்பலில் எரிந்த தீயை அணைக்க தண்ணீரை பீய்ச்சி அடித்தது.