இந்திய கடலோர காவல் படை சார்பில், எண்ணெய் கசிவு பேரிடர் மற்றும் தீ விபத்தை கட்டுப்படுத்தும் ஒத்திகை சென்னை கடற்பகுதியில் நடந்தது. இதில் கடலோர காவல் படையின் 'சமுத்திரா பிரஹாரி' கப்பல், மற்றொரு கப்பலில் எரிந்த தீயை அணைக்க தண்ணீரை பீய்ச்சி அடித்தது.
கம்பிகளுக்குள் கானகத்து மயில்.! கோவை மாநகராட்சி வ.உ.சி., உயிரியல் பூங்காவில் இருந்த பறவைகளும் விலங்குகளும் மாற்று இடத்துக்கு அனுப்பப்பட்ட பின்பும் கானகத்து மயிலுக்கு களம் மாற பிடிக்கவில்லை போல
திருப்பூர், த.வெ.க தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பாலமுருகன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் ஆய்வு மேற்கொண்டார். கட்சி தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் பூ வியாபாரிகளை சந்திக்க முடியாமல் தினறல்.