வனப்பகுதியில் புதுசா ரிசார்ட் கட்டியிருக்கானு நினைச்சுக்காதீங்க, பல ஆண்டு போராட்டத்துக்கு பின், மண் குடிசையில் வாழ்ந்த பழங்குடியின மக்களுக்கு புதிதாக கான்கிரீட் வீடு கட்டி கொடுத்திருக்கு தமிழக அரசு. இடம்: டாப்சிலிப், பொள்ளாச்சி.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.