திருநெல்வேலி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை கண்டித்து கவுன்சிலர் பவுல்ராஜ் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்துடன் வந்து தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி பேசினார்.
திருப்பூர்,காலேஜ் ரோடு நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன் சாலை பணியாளர் சங்கம் சார்பில் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்,காது,வாய் மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிட மேலாண்மை துறை சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது.