நச்சுத்தன்மை உடைய இருமல் மருந்தை குடித்து குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தால் நாடே கலங்கிப்போயிருக்கிறது. ஆனால் இப்போது தான் மருந்தாய்வாளர்கள் மருந்துகளின் தரத்தை ஆய்வு செய்வதில் மும்முரம் காட்டி வருகின்றனர். இடம்: சிந்த்வாரா, மத்திய பிரதேசம்
திருநெல்வேலியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் உள்ள காவல்கிணறு பகுதி, காற்றாலை நகரம் போல காட்சி அளிக்கிறது. அங்கு உயரமான காற்றாலைகள், சுழலும் வெள்ளை இறகுகள் ஒன்றிணைந்து தனித்துவமான இயற்கை காட்சியை உருவாக்குகின்றன.
புரட்டாசி மாத 4ம் சனிக்கிழமையை முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ ரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தீபாவளி பண்டிகை வரும் அக் 20ம் தேதி கொண்டாடப் படுகிறது. அதற்கு தே வைப்படும் மண் அகல் விளக்குகளை தயார் செய்து, உலர வைப்பதற்காக எடுத்துச் செல்லும் கைவினை கலைஞர். இடம்: பிர்ஹாம், மேற்கு வங்கம்