உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் பகுதியில் உள்ள கேதார்நாத் கோவிலுக்கு குடை பிடிப்பது போல தவிழ்ந்து வரும் மேகக்கூட்டம், பின்னால் மாலை நேர சூரியன் ஒளிபட்டு பொன்னிறத்தில் தகதகக்கும் இமயம்.
திருநெல்வேலி மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்துவரும் நிலையில் குன்னத்தூர் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் வளர்ந்து பச்சை பசேலென ரம்மியமாக காட்சியளிக்கின்றது.
மேற்கு வங்கத்தில் தீபாவளி பண்டிகை, காளி பூஜையாக வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். வரும் அக் 20ம் தேதி இந்த பூஜை நடக்க உள்ள நிலையில் அதற்காக தயார் நிலையில் உள்ள காளி சிலைகளுக்கு வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்ட கலைஞர். இடம்: கோல்கட்டா