உடுமலை அமராவதி அணையிலிருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீரில், ஆற்றிலுள்ள தரைப்பாலத்தில் வாகனங்களை வரிசையாக நிறுத்தி சுத்தம் செய்கின்றனர். இடம்: கொழுமம்.
இந்தியர்களின் ஒளி வீசும் பண்டிகையான தீபாவளி, உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய் நகரில் உள்ள வணிக வளாகத்தில் பிரமாண்ட ரங்கோலி கோலம் போடப்பட்டு உள்ளது.
உத்தரபிரதேசத்தின் ஆக்ராவில் நம் ராணுவத்தின் திறன் மற்றும் பயிற்சிகளை பொதுமக்கள் முன் வெளிப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஹெலிகாப்டர் படை பிரிவினர் நிகழ்த்திய சாகசம் பார்வையாளர்களை கவர்ந்தது.