காவலர் வீரவணக்க நினை தினத்தை ஒட்டி சென்னை மயிலாப்பூர் டி.ஜி.பி., அலுவலகத்தில் உள்ள காவலர் நினைவு சின்னம் முன்பு முதல்வர் ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், முன்னோர்களுக்கு திதி மற்றும் சடங்குகள் செய்யும் ‘பித்ரு பட்சம்’ நிகழ்வின் ஒரு பகுதியாக, ராஜேந்திர பிரசாத் படித்துறையில் திரண்டிருந்த மக்கள்.
ராஜஸ்தான் மாநிலம் பிகானரில், தேசிய வனவிலங்கு வாரக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நடைபெற்ற வனவிலங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியில், விலங்கு போல வேடமணிந்து பங்கேற்ற பள்ளி சிறுவர்களில் ஒருவன்
மதுரை அரசு மருத்துவமனை ரோட்டை பிரமாண்டமாக அகலப்படுத்தினாலும், ‘நடைபாதை நடப்பவர்களுக்கானது’ என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை அதிகாரிகள் மறந்து, நடைபாதையை கடைபாதையாக மாற்றி பொதுமக்களை மீண்டும் ரோட்டில் நடக்க விடுகின்றனர்.