ஆஸ்திரேலியாவின் பசுமை நிறைந்த கிறிஸ்துமஸ் தீவின் அடர்ந்த காடுகளில், உலகில் எங்கும் காண முடியாத சிவப்பு நண்டுகள் வசிக்கின்றன. இனப்பெருக்கம் காரணமாக ஆண்டுக்கு ஒரு முறை தங்கள் இருப்பிடத்தில் இருந்து புறப்பட்டு கடற்கரையை நோக்கி அவை செல்கின்றன. இவ்வாறு 5 கோடிக்கும் அதிகமான நண்டுகள் நகர்வதால் இடையூறு ஏற்படாத படி அதன் வழித்தடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளன.
விழுப்புரத்தில் தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் உலக வெறி நோய் தின விழிப்புணர்வு பேரணியை டி.ஆர்.ஓ., ஹரிதாஸ் துவக்கி வைத்தார்.
உலக இருதய தினத்தை முன்னிட்டு, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவம சார்பில் நடந்த விழிப்புணர்வு பேரணியை மருத்துவமனையின் டீன் கீதாஞ்சலி துவக்கி வைத்தார்.
புதுச்சேரி சுகாதார மற்றும் குடும்ப நல வழித் துறை ரேபிஸ் நோய் தடுப்பு திட்டம் சார்பில் வெறிநாய் கடி குறித்து ஆட்டோ பிரச்சாரத்தை சுகாதாரத்துறை இயக்குனர் தொடக்கி வைத்தார்.