இயற்கையின் கூடாரம் இது...மேகங்களின் தழுவல்கள் மலைகளின் மீது கொண்ட அன்பினில் கொஞ்சம் சுற்றி வளைத்து தான் செல்கிறது கண்களுக்கு விருந்து படைக்க. இடம்: நரசிபுரம் ரோடு, கோவை.
வடகிழக்கு பருவமழை தொடர்ந்து புயல் எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் மீன் பிடிக்க. கடலுக்குள் செல்லாமல் தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். இடம்: கடலூர்
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்துவரும் மழையால் தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ராம நதி அணையின் நீர் மட்டம் உயர்ந்து ரம்மியமாக காட்சியளிக்கின்றது.
நம் நாட்டின் வலிமையை பறைசாற்றும் விதத்தில், ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தவாங்க் என்ற இடத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. இதில் வைக்கப்பட்டிருந்த நவீன ரக துப்பாக்கியை சிறுவனிடம் காட்டி விளக்கம் அளித்த ராணுவ வீரர்.