அடையாறு ஆற்றின் முகத்துவாரம் பகுதியில் நீர்வளத்துறை சார்பில் நடந்துவரும் தூர்வாரும் பணிகளை துரிதப்படுத்த அதிக அளவில் பணியில் ஈடுபட்டுள்ள பொக்லைன் இயந்திரங்கள். இடம்: சீனிவாசபுரம்.
வட மாநிலங்களில் சூரியனை வழிபடும் சத் பூஜையின் போது மூங்கில் கூடையில், சோளம், கரும்பு, தேங்காய், தீபம், பழங்களை வைத்து வழிபடுவது வழக்கம். இதற்கான விற்பனை, சந்தையில் சூடுபிடித்தது. இடம்: கான்பூர், உத்தரபிரதேசம்.
ஐரோப்பிய நாடான ஜெர்மனி அணுமின்சக்தி பயன்பாட்டை படிப்படியாக குறைக்க திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, குண்ட்ரெம்மிங்கன் அணுமின் நிலையம் மூடப்பட்டுள்ளது. அதில் இருந்த தலா 480 அடி உயரமுள்ள இரண்டு குளிரூட்டும் கோபுரங்கள் வெடி வைத்து தகர்க்கப்பட்டன.
மழையில் நனைந்த அறுவடை நெல்லை, நுகர்பொருள் வாணிப கழகத்தினர் வாங்க மறுப்பதால், ஈர நெல்லை காய வைக்கும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர். இடம்: திருநெல்வேலி