மோந்தா புயல் காரணமாக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததையடுத்து, சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் தங்கள் படகுகளை நிறுத்தி பாதுகாப்பாக கட்டி வைத்து உள்ளனர். ஆழ்கடல் மீன் பிடி நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளன.
குளத்தில் நின்றபடி சூரிய பூஜை! சத் பூஜையை முன்னிட்டு கோவை குறிச்சி குளத்தில் நீரில் நின்றபடி சூரியனை வழிபட்டு பிரார்த்தனையில் ஈடுபட்ட கோவை வாழ் பீஹார் மற்றும் உ.பி.,யை சேர்ந்த வட மாநிலத்தவர்கள்.