காஞ்சி, கோவிந்தவாடி ஏரி நிரம்பியதால், நாணல் புற்கள் மூழ்கியது. உயர்மின் கோபுர மின் கம்பங்களில் குஞ்சு பொரித்து வரும் நீர்க்கோழிகள். பிள்ளையைப் பெற்று வளர்த்து ஆளாக்குவதற்குள் எந்த தாய்க்கும் சிரமம் தான். 2வது படம்; தண்ணீரில் மூழ்குவதற்கு முன் காணப்பட்ட நாணல்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல்லை எடுத்துச் செல்ல லாரிகள் வராததால், உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடை கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளாகவும், குவியலாகவும் தேங்கி கிடக்கிறது.
தென் அமெரிக்க நாடான பிரேசிலின் தலைநகர் பிரசிலீயாவில் உள்ள மருத்துவமனையில் நரம்பியல் நோயாளிகளுக்கு மன அமைதி மற்றும் மகிழ்ச்சியை தர சிறப்பு பயிற்சி பெற்ற நாய்கள் அனுமதிக்கப்படுகின்றன.