தக்காளி விலை கடுமையாக சரிந்தாலும், மழையால் பாதிக்கப்பட்டதாலும், விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த தக்காளியை டிராக்டரில் கொண்டு வந்து சாலையோரம் கொட்டினர். இடம்: சிக்கமகளூரு, கர்நாடகா.
தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின், 1,040வது சதய விழாவை யொட்டி, பெரிய கோவில் வளாகத்தில் 400 கலைஞர்கள் பரதநாட்டியமாடி புஷ்பாஞ்சலி செலுத்தினர்.
உத்திர பிரதேச மாநிலம் வாரணாசியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சங்க புதிய கட்டடத்தை துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். அருகில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தமிழக அமைச்சர் ரகுபதி.
திருநெல்வேலி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பிசான நெல் சாகுபடிக்காக தங்களது விவசாய நிலங்களை தயார்செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்... இடம் வடக்கு செழியநல்லூர்.
திருப்பூர் மாநகராட்சியில் சேகரமாகும் குப்பைகளை, இடுவாய் பகுதியில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கால்நடைகளுடன் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு பிறகு பசுமைக்கு மாறிய வனம் சூழ்ந்த, மலைகளின் நடுவே அருவியில் வரும் வெள்ளம் வெள்ளி கீற்றாக காட்சியளிப்பது, சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது. இடம்: குன்னூர் மேட்டுப்பாளையம் மலை பாதை எதிரே உள்ள பகாசூரன் மலை.
கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் அரசு கொள்முதல் செய்து அடுக்கி வைத்துள்ள பல நெல் மூட்டைகள் நனைந்து முளைப்பு ஏற்பட்டு சேதம் அடைந்துள்ளதை, புவனகிரி அதிமுக எம்எல்ஏ அருண்மொழி தேவன் ஆய்வு செய்தார்.