மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு, உள் பிரகாரத்தில் உற்சவர் சந்திரசேகர், சிறப்பு அலங்காரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பீஹாரின் புத்த கயாவில் உள்ள மகாபோதி புத்த விஹாரில் மழைக்காலம் நிறைவடைவதை குறிக்கும் வகையில் நடைபெற்ற 'கதினா' வழிபாட்டில் பங்கேற்ற தாய்லாந்து பக்தர்கள்.
ராஜஸ்தானின் புஷ்கரில் நடந்து வரும் ஒட்டகத் திருவிழாவில் பார்வையாளர்களை கவரும் விதத்தில் பல வினோதமான போட்டிகள் நடத்தப்படுகின்றன. பெரிய மீசைக்கான போட்டியில் பங்கேற்றவர்களுடன் பார்வையாளராக வந்த வெளிநாட்டு பெண்.
பீஹாரில் முதற்கட்ட சட்டசபை தேர்தல் வரும் 6 ல் நடைபெற உள்ளது. இதையடுத்து, அரசியல் கட்சியினர் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அங்குள்ள காந்தி மைதானதை வாகன நிறுத்துமிடமாக போக்குவரத்து போலீசார் மாற்றியுள்ளனர். இடம்: பாட்னா.