உலக கல்விக்கழகங்கள் கூட்டமைப்பின் 8ம் ஆண்டு மாநாடு டில்லியில் நடந்தது. இதில் முன்னாள் மத்திய கல்வி அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி, வேலூர் விஐடி பல்கலை வேந்தர் கோ.விசுவநாதனுக்கு, 'வாழ் நாள் சாதனையாளர் விருது' வழங்கி கவுரவித்தார்.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.
திருப்பூர், காந்திநகர் ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளி அரங்கில் பி.எப்., திட்டத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.