மஹாராஷ்டிராவின் நவி மும்பையில் உள்ள பழைய இரும்பு பொருட்கள் சேமிப்பு கிடங்கில் பிடித்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள். இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்றாலும், பெருத்த பொருட் சேதம் ஏற்பட்டது.
காஞ்சிபுரம் வல்லக்கோட்டை முருகன் கோவிலில், ஐப்பசி மாத கிருத்திகையையொட்டி, மூலவர் சந்தன காப்பு அலங்காரத்திலும், உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத முருகன் ரத்னாங்கி மலர் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
தினமலர் நாளிதழின் மாணவர் பதிப்பான பட்டம் இதழுடன் ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் கிப்ட் பார்ட்னராக சத்யா ஏஜன்சி நிறுவனம் இணைந்து வழங்கும் பட்டம் 2025-26 வினாடி வினா போட்டி திரிவேணி அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் நடந்தது.
கார்த்திகை நெருங்குவதையொட்டி, கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் ஊழியர்கள், மண் விளக்கு உற்பத்தியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழல், இயற்கை அழகை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் பொறுப்பாகும். ஆனால் சமீப காலமாக அரசியல்வாதிகள், அதிகாரிகள் தலையீட்டால் புற்றீசல் போல் பெருகிவிட்ட விதி மீறல் கட்டங்களால் பேரிடர் அபாயம் ஏற்பட்டுள்ளது. இடம்: குன்னூர்.