கிறிஸ்மஸ் பண்டிகையொட்டி சென்னை எழும்பூர் போர்டெல் ஹோட்டலில் 100 கிலோ எடையுள்ள பிளம் கேக் கலவை தயாரிக்கும் பணி துவங்கியது. இதில் வைகை ஹோட்டல் குழுமம் இயக்குனர் சித்தார்த்.தினமலர் முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி கல்பலதா.
தோள் கொடுக்கும் நண்பன் உதவிக்கு கால் கொடுப்பது தவறில்லை. இதில் தலைகவசம் சேர்த்து வழங்கினால் விபத்துக்கு அவசியம் இல்லையே. இடம்: கோவை தடாகம் ரோடு பால்கம்பெனி அருகே.
தை மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வெண் பட்டு குடை சூழ ஸ்ரீரங்கநாதர் திருக்கோயில் வளாகத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பூர், பல்லடம் ரோடு பி.எப்., அலுவலகம் மண்டல அலுவலகமாக தரம் உயர்த்தப்பட்டு திறப்பு நடந்தது. அதில் கோவை கூடுதல் மத்திய நிதி கமிஷனர் கஸாலா அலிகான் மரக்கன்று நட்டு வைத்தார்.
நெடுஞ்சாலைத்துறை சார்பில் கோவையில் பல்வேறு இடங்களில் நடுவதற்காக லாரியில் கொண்டு வரப்பட்டுள்ள மரக்கன்றுகள் திருச்சி ரோடு நெடுஞ்சாலை அலுவலகத்தில் வைக்கப்பட்டுளளது.