கிழக்காசிய நாடான தென்கொரியாவில் அரசு கொண்டு வரும் புதிய தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்கள் மற்றும் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும் அமெரிக்காவின் வரி விதிப்பு உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டின் வர்த்தக தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைநகர் சியோவில் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடத்தினர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூர் பகுதியில் உள்ள காஞ்சி சங்கர மடத்திற்கு அசாம் மாநிலத்தில் இருந்து பிஜிலி என்ற 5 வயது பெண் யானை வந்தது. மடத்தில் உள்ள மையத்தில் யானை பராமரிக்கப்படும் என அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அனந்த் சதுர்தசி தினத்தில் விநாயகர் விசர்ஜனம் எனப்படும் சிலைகளை கடலில் கரைக்கும் நிகழ்வு மஹாராஷ்டிராவின் மும்பையில் நடந்தது. அதில் வண்ணப்பொடிகள் தூவி கொண்டாட்டத்துடன் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்ட பிரமாண்ட விநாயகர் சிலை.
புதுச்சேரி உள்ளாட்சித் துறை தூய்மை பாரத இயக்கம்-நகர்ப்புறம் 2.0 திட்டத்தின் கீழ் கம்பன் கலை யரங்க வளாகத்தில் கல்லூரி மாணவிகளுக்கான கோலப்போட்டி நடந்தது.
விவசாய கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாய சங்கங்களின் பாதுகாப்பு இயக்கம் மற்றும் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் திருவோடு ஏந்தி போராட்டம் நடத்தப்பட்டது.