சென்னையில் நடந்த மாநில வில்வித்தை போட்டியில், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்ற, மதுரவாயல் அர்ஜூனா வில்வித்தை பயிற்சி நிலைய வீரர்- வீராங்கனையருக்கு, காவல்துறை முன்னாள் அதிகாரி எம்.கருணாநிதி பரிசு வழங்கி பாராட்டினார்.
எர்ணாவூர் மேம்பாலம் கீழ், தண்டவாளத்தை கடக்கும் வகையில் இருந்த வழிகளை, ரயில்வே ஊழியர்கள் கான்கிரிட் தண்டவாளக் கற்கள் கொண்டு அடைத்து வருகின்றனர். இடம்: ஒத்தவாடை, எர்ணாவூர்
புதுச்சேரி கருவடிக்குப்பம் சிவாஜி சிலை அருகில் பல லட்ச ரூபாய் செலவில் சாலை ஓரத்தில் மழை சில மாதங்களுக்கு முன்புதான் மழை நீர் வாய்க்கால் கட்டப்பட்டது. கட்டப்பட்ட வாய்க்காலை இடித்து வருகின்றனர்.
வடகுருஸ்தலமான, திருவொற்றியூர் - தட்சிணாமூர்த்தி கோவிலில், குருபெயர்ச்சி மஹோத்சவத்தையொட்டி, கோவில் வளாகத்தில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இடம். தேரடி, திருவொற்றியூர்.