தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் கடந்த வாரம் கல்மேகி புயல் வீசியதில் 200 பேர் பலியாகினர். தற்போது பங் வோங் புயல் தாக்கி மேலும் சேதத்தை ஏற்படுத்தியது. இடம்: நவோடாஸ்.
சீக்கியர்களுக்கு நீதி என்ற அமெரிக்காவை தளமாகக் கொண்ட பிரிவினைவாத அமைப்பு, காலிஸ்தான் பிரிவினைவாத கோரிக்கைக்கு ஆதரவு திரட்ட ஓட்டெடுப்பு நடத்த உள்ளது. மான்ட்ரியல் நகரில் காலிஸ்தான் ஆதரவு குழுவினர் 500 கார்கள் அடங்கிய பேரணியை நடத்தினர்.
வடமாநிலங்களில் குளிர்காலம் துவங்கிவிட்டது. மத்திய பிரதேசம் ஜபல்பூரில் பாயும் நர்மதா நதியின் மீது பனி படர்ந்த அதிகாலை வேளையில் சுகமாக பறந்து சென்ற குளிர்கால பறவைகள்.
டெல்லியில் நேற்று இரவு செங்கோட்டை முன்பு நடந்த கார் குண்டுவெடிப்பில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனைஇல் ஈடுபட்டனர்