காஞ்சிபுரம் வல்லக்கோட்டை முருகன் கோவிலில், மூலவர் வெற்றிலை மாலை அலங்காரத்திலும், உற்சவர் முருகன் ஏலக்காய் மாலை, சாமந்தி மாலை அணிந்து, ரத்னாங்கி சேவை அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
டாஸ்மாக் ஊழியர்களின் பணியை நிரந்தரம் செய்யக்கோரி, தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கத்தினர், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இடம்: ஜார்ஜ் டவுன்.
பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் சார்பில், அரசாணை எண் 20ன் படி, சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வு உடனடியாக நடத்தி பணி வழங்க கோரி, சென்னையில் நீதி கேட்கும் போராட்டம் நடந்தது.