நீலகிரி மாவட்டம் குன்னூர் லேம்ஸ் ராக், டால்பின் நோஸ் காட்சி முனை செல்லும் சாலையோர தேயிலை தோட்ட பகுதிகளில் மேகமூட்டம் நிலவிய போதும், செல்பி மற்றும் போட்டோ எடுக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டினர்.
காஞ்சிபுரம் வல்லக்கோட்டை முருகன் கோவிலில், மூலவர் வெற்றிலை மாலை அலங்காரத்திலும், உற்சவர் முருகன் ஏலக்காய் மாலை, சாமந்தி மாலை அணிந்து, ரத்னாங்கி சேவை அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காஞ்சிபுரம், உத்திரமேரூர் பேரூராட்சி, காக்கநல்லூரில் குழாய் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாக வெளியேறி வந்தது. இதுக்குறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, உடைப்பு ஏற்பட்ட குழாய் பேரூராட்சி நிர்வாகத்தின் வாயிலாக சீரமைக்கப்பட்டது.
கலை பண்பாட்டு துறை சார்பில், எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில், ஓவிய கண்காட்சி மற்றும் விற்பனை சந்தை தொடங்கியது. இதில் பார்வையாளர்களைகவர்ந்த வண்ண ஓவியங்கள். இன்றும், நாளையும் கண்டு களித்து, வாங்கி மகிழலாம். காலை 10 மணி முதல் அனுமதி இலவசம்.
நாளுக்கு நாள் பெருகிவரும் பக்தர்கள் கூட்டம் காரணமாக, உத்தர பிரதேசத்தின் வாரணாசியை அழகு மற்றும் விரிவுபடுத்தும் நோக்கில், நெருக்கமான கடைவீதிகள் இடித்து அகலப்படுத்தப்படுகிறது.
திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் கன்னட ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு வந்த கட்சியினர் தங்கள் வாகனங்களை வள்ளலார் நகர் பஸ் நிலையத்தில் அத்துமீறி நிறுத்தினர்.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 12.80 கோடி மதிப்பில் பிங்க் ரோந்து வாகன சேவைகளை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார். இடம்: தலைமை செயலகம், சென்னை.