உள்ளடக்கத்திற்கு செல்ல தை மாதத்தை வட மாநிலத்தவர்கள், மகர மாதம் என்று அழைக்கின்றனர். அப்போது கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் உ.பி.,யின் பிரயாக்ராஜில் பக்தர்கள் புனித நீராடுவர். அவர்களின் வசதிக்காக, கங்கை மீது தற்காலிக மிதவைப் பாலங்கள் கட்டும் பணி இப்போதே துவங்கி விட்டது. 2/
எந்த சுமையா இருந்தாலும் என் மகள் சுமைதான் எனக்கு சுகமான சுமை என்கிறாரோ இந்த தாய். இடம்: புதுச்சேரி பாரதி வீதி 3/
புதுச்சேரிக்கு வந்த லண்டன் நாட்டு சுற்றுலா பயணிகள் ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து ஆச்சரியமாக படம் பிடித்து மகிழ்ந்தனர். 4/
பொள்ளாச்சி பகுதிகளில் காலை நேரத்தில் பனி அதிகரித்து இயற்கையின் ஓவியமாய் பிரதிபலிக்கிறது. 5/
புதுச்சேரி முத்தியால்பேட்டை கணபதி நகர் பெரியநாயகி சமேத உடனுறை பெரியாண்டவர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. 6/
கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அகல் விளக்கு ஜரூராக நடைபெற்றது. 7/
புதுச்சேரி முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் திருப்பணி நடந்து வரும் நவ நரசிம்ம பெருமாள் கோவிலில் கொடிமரம் அமைத்து சிறப்பு பூஜை நடந்தது. 8/
திருவண்ணாமலை கார்த்திகை திருவிழா மகாதீபத்தில் திரியாக பயன்படுத்தப்படும் 1000 மீட்டர் காடாத்துணி 3ம் பிரகாரத்தை சுற்றி கொண்டு வரப்பட்டது. 9/
திருவண்ணாமலை தீபத்திருவிழா 8ம் நாள் காலை உற்சவத்தில், குதிரை வாகனத்தில் சந்திரசேகரர் எழுந்தருளி மாட வீதி உலா வந்தார். 10/
உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடந்தது.
மேலும் undefined
மேலும் undefined