திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழாவின் 7வது நாளன்று நடைபெறும் தேரோட்டத்தில் பெண்கள் மட்டுமே இழுக்கும் பராசக்தி அம்மன் தேர், 71 லட்சம் ரூபாயில் புதுப்பிக்கும் பணி முடிந்து வெள்ளோட்டம் நடந்தது. ஏராளமான பெண்கள் தேரை இழுத்து வழிபட்டனர்.
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். இடம்.புஷ்பாநகர்,நுங்கம்பாக்கம்.
திருவள்ளூர் அடுத்த பட்டரைபெரும்புதூர் பகுதியில் திமுக வேட்பாளர் வி ஜி ராஜேந்திரன் தேர்தல் பிரசாரம் செய்தார் உடன் வந்த தொண்டர் தெருக்கூத்து நாடகம் வேடமடைந்து இருசக்கரத்தில் வந்தார்
சென்னை மாதவரம் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் சுதர்சனத்தை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் செய்தார் . முன்பு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.