நாளை கார்த்திகை மாதம் பிறப்பதையொட்டி, சபரிமலைக்கு மாலை அணியும் அய்யப்ப பக்தர்களுக்காக விதவிதமாக விற்பனைக்கு வந்துள்ள மாலைகள். இடம்: மயிலாடுப்பூர், சென்னை.
திருவாலங்காடு சாட்சிபூதேஸ்வரர் கோவில் எதிரே உள்ள தீப்பாய்ந்த மண்டபம், அறநிலையத்துறை அதிகாரிகளால் கடந்த மாதம் சீரமைக்கப்பட்டது. மண்டபத்திற்கு சாலை அமைக்க, எதிரே உள்ள அடிபம்பு மண் கொட்டி மூடப்பட்டு உள்ளது.
தாய்லாந்தின் நகோன் பாத்தோம் மாகாணத்தில், தா சின் ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக, அங்குள்ள உணவகத்தின் உள்ளே நீர் புகுந்தது. வெள்ள நீரில் மீன்கள் துள்ளி விளையாடி கொண்டிருக்க அதனை ரசித்த படியே, வாடிக்கையாளர்கள் உணவை ருசித்துக் கொண்டிருந்தனர்.
பொள்ளாச்சி, பல்லடம் ரோட்டில் ரவுண்டானா அமைக்க விநாயகர் கோவில் சிலை அகற்றப்பட்டது. இங்குள்ள பழமையான அரச மரம் மறுநடவு செய்வதற்காக கிளைகள் வெட்டப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழாவின் 7வது நாளன்று நடைபெறும் தேரோட்டத்தில் பெண்கள் மட்டுமே இழுக்கும் பராசக்தி அம்மன் தேர், 71 லட்சம் ரூபாயில் புதுப்பிக்கும் பணி முடிந்து வெள்ளோட்டம் நடந்தது. ஏராளமான பெண்கள் தேரை இழுத்து வழிபட்டனர்.
பீஹார் சட்டசபை தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியை டில்லி பாஜ தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி உற்சாகமாக கையசைத்து, கட்சியினரின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டார்.