அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில், இந்தியாவின் பாரம்பரிய உடையான சே லைக்கு கிடைத்து வரும் உலகளாவிய வரவேற்பை கொண்டாடும் வகையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், சேலை அணிந்து பங்கேற்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெண்கள்.
ஜெம் வீரமணி போக்சோ வழக்கில் கைதான மகேந்திர சிம்ஹன் 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க , சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் போக்சோ நீதிமன்றம் அழைத்து வந்தனர். இடம்: சென்னை உயர் நீதிமன்றம்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய நந்திய பகவானுக்கு சந்தனம் அபிஷேகம் நடந்தது.
முழு வீச்சு!மாதவரம் - சிறுசேரி வழித்தடத்தில் மணப்பாக்கம் அருகே மெட்ரோ மேம்பாலத்தில் ரயில் பாதை அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.இடம் : மணப்பாக்கம்
குளிர்பான விளம்பர பலகை முன் ஹாயாக அமர்ந்து விளம்பர மாடல் மங்கைக்கே டப் கொடுத்த மங்கியாரின் சேட்டை... அந்த நொடியில் நம் புகைப்பட கலைஞரின் கேமராவுக்கு நல்ல வேட்டை!. இடம்: உடுமலை, திருப்பூர்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல படிப்பாதை, யானைப்பாதை, மின் இழுவை ரயில், ரோப் கார் ஆகிய வசதிகள் உள்ளன. இதில் ரோப் கார் சேவையின் வருடாந்திர பராமரிப்பு பணி 64 நாட்கள் முடிந்து மீண்டும் துவங்கியது.