ஐரோப்பிய நாடான பிரான்சின் பாரிசில் உள்ள கிரெவின் அருட்காட்சியகம் மெழுகு சிலைகளுக்கு புகழ்பெற்றது. இங்கு பிரபலமான நபர்களின் மெழுகு சிலைகள் இடம்பெற்றுள்ளன. தற்போது பிரிட்டனின் மறைந்த இளவரசி டயானாவின் முழு உருவ மெழுகு சிலை பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது.
கோவை தெற்கு தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்த குஷ்பூவை ஆரத்தி எடுத்து வரவேற்ற தொண்டர்கள்.
மூத்த குடிமக்கள் என்ற அடிப்படையில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் தேர்தல் அதிகாரி முன்னிலையில் தபால் ஓட்டு பதிவு செய்தார். அருகில் மகள் ஸ்ரீ காந்தி
கோவை கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட மலுமிச்சம்பட்டி நால்ரோடு சந்திப்பில் திமுக வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் மேற்கொண்டார்.