அவ்வப்போது சாலையில் திடீரென பிரேக் டவுன் ஆகி நிற்கும் அரசு வாகனங்களில் ஒன்றான இந்த போலீஸ் வாகனத்தை, தனி ஒருவராக தள்ளிய போலீஸ்காரர். இடம: ராயபுரம், சென்னை.
மாநகராட்சி பள்ளியில் பயிலும் மாணவியருக்கு வழங்கப்பட்ட இலவச சைக்கிளின் டயர்களில் காற்றில்லாத காரணத்தினால் வெகு தூரம் சைக்கிளை தள்ளிச் சென்றனர். இடம்: ஜெயகோபால் கரோடியா பள்ளி, சாலிகிராமம், சென்னை
இலைகள் உதிர்ந்த மரத்தின் கிளைகளில் இரவில் இரை தேட சென்று, பகலில், ஓய்வெடுக்கும் வவ்வால்கள், அம்மரத்தை தனித்துவமாக காட்சியளிக்க செய்கிறது. இடம்: உடுமலை.
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, தமிழக அரசின் பூம்புகார் விற்பனையகத்தில், பாரம்பரிய பித்தளை உள்ளிட்ட விளக்குகளின் விற்பனை மற்றும் கண்காட்சி துவங்கியது. டிசம்பர் 6ம் தேதி வரை நடக்கும், இந்த கண்காட்சியை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையிடலாம். இடம்: அண்ணாமலை