ஜி 20 அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்க தென் ஆப்ரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, உற்சாக வரவேற்பு அளித்த இந்திய வம்சாவளியினர். இடம்: ஜோகன்ஸ்பர்க்.
அவ்வப்போது சாலையில் திடீரென பிரேக் டவுன் ஆகி நிற்கும் அரசு வாகனங்களில் ஒன்றான இந்த போலீஸ் வாகனத்தை, தனி ஒருவராக தள்ளிய போலீஸ்காரர். இடம: ராயபுரம், சென்னை.
மாநகராட்சி பள்ளியில் பயிலும் மாணவியருக்கு வழங்கப்பட்ட இலவச சைக்கிளின் டயர்களில் காற்றில்லாத காரணத்தினால் வெகு தூரம் சைக்கிளை தள்ளிச் சென்றனர். இடம்: ஜெயகோபால் கரோடியா பள்ளி, சாலிகிராமம், சென்னை
இலைகள் உதிர்ந்த மரத்தின் கிளைகளில் இரவில் இரை தேட சென்று, பகலில், ஓய்வெடுக்கும் வவ்வால்கள், அம்மரத்தை தனித்துவமாக காட்சியளிக்க செய்கிறது. இடம்: உடுமலை.