மழையோ, வெயிலோ: நாய் செய்யும் தொழிலை ரசித்து செய்வதே சுகமானது தான். வாகனத்திற்கு வண்ணங்களால் ஆடை அணிவித்தது போல குடைகளை வைத்து வியாபாரம் செய்கிறார், இவர். இடம்: சிங்காநல்லூர், கோவை.
திருநெல்வேலி மாவட்டம் பிரானஞ்சேரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் 1.5 லட்சத்திற்கும் அதிகமான வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன...
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த ஆந்திர மாநில எல்லையோரம் அமைந்துள்ளது பரதராமி அரசு ஊராட்சி தொடக்கப்பள்ளி. கடந்த ஒரு மாதத்திற்கு முன் பெய்த மழைநீர் பள்ளி வளாகத்தில் குளம்போல் தேங்கியுள்ளதால், மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
ஜி 20 அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்க தென் ஆப்ரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, உற்சாக வரவேற்பு அளித்த இந்திய வம்சாவளியினர். இடம்: ஜோகன்ஸ்பர்க்.
அவ்வப்போது சாலையில் திடீரென பிரேக் டவுன் ஆகி நிற்கும் அரசு வாகனங்களில் ஒன்றான இந்த போலீஸ் வாகனத்தை, தனி ஒருவராக தள்ளிய போலீஸ்காரர். இடம: ராயபுரம், சென்னை.
மாநகராட்சி பள்ளியில் பயிலும் மாணவியருக்கு வழங்கப்பட்ட இலவச சைக்கிளின் டயர்களில் காற்றில்லாத காரணத்தினால் வெகு தூரம் சைக்கிளை தள்ளிச் சென்றனர். இடம்: ஜெயகோபால் கரோடியா பள்ளி, சாலிகிராமம், சென்னை