ஊட்டி நகராட்சி கமிஷனர் பயன்படுத்தும் இந்த வாகனம் ஆய்வு மற்றும் பல்வேறு தேவைகளுக்கு நகர் பகுதிக்கு வரும் போது, பல மணி நேரம் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்துவதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர். விதிமீறலை கண்காணித்து அபராதம் விதிக்கும் போக்குவரத்து போலீசாரும் மவுனம் காக்கின்றனர். மணிக்கூண்டு சாலையில் இப்படி விதிமீறி நிறுத்தப்பட்ட அரசு வாகனத்தால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டது.
ஜெம் வீரமணி போக்சோ வழக்கில் கைதான மகேந்திர சிம்ஹன் 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க , சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் போக்சோ நீதிமன்றம் அழைத்து வந்தனர். இடம்: சென்னை உயர் நீதிமன்றம்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய நந்திய பகவானுக்கு சந்தனம் அபிஷேகம் நடந்தது.
முழு வீச்சு!மாதவரம் - சிறுசேரி வழித்தடத்தில் மணப்பாக்கம் அருகே மெட்ரோ மேம்பாலத்தில் ரயில் பாதை அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.இடம் : மணப்பாக்கம்
குளிர்பான விளம்பர பலகை முன் ஹாயாக அமர்ந்து விளம்பர மாடல் மங்கைக்கே டப் கொடுத்த மங்கியாரின் சேட்டை... அந்த நொடியில் நம் புகைப்பட கலைஞரின் கேமராவுக்கு நல்ல வேட்டை!. இடம்: உடுமலை, திருப்பூர்.