சென்னை கவர்னர் மாளிகையில் நடந்த 17வது பழங்குடியினர் இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சியை துவக்கி வைத்து, சத்தீஸ்கர் மாநில பழங்குடியின மாணவர்களுடன் பாரம்பரிய இசைக்கு நடனம் ஆடிய தமிழக கவர்னர் ரவி.இடம் : கிண்டி
சென்னை மாநகராட்சியின் பள்ளிக்கல்வித்துறை சார்பில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து அண்ணாநகர் டவர் பூங்கா வாயிலில மாணவர்களின் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது.
விழுப்புரம் பீமநாயக்கன் தோப்பு நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடந்த தினமலர் பட்டம் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிா்த்து, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும், தூய்மைப் பணியாளா்களை நேரில் சந்தித்து பாமக பொருளாளர் திலகபாமா ஆதரவு தெரிவித்தார்.