சென்னை கவர்னர் மாளிகையில் நடந்த 17வது பழங்குடியினர் இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சியை துவககி வைத்து, சததீஸ்கர் மாநில பழங்குடியின மாணவர்களுடன் பாரம்பரிய இசைக்கு நடனமாடி மகிழ்ந்த தமிழக கவர்னர் ரவி. இடம்: கிண்டி.
வீட்டுக்கு தேவையான பொருட்களை வீட்டிற்கே டோர் டெலிவரி செய்யும் சில நிறுவனங்கள் சீனாவில் உள்ளன. அந்த வகையில், சீனாவில் குவாங்டாங் மாகாணத்தின் ஷென்லென் நகரில் டோர் டெலிவரி செய்ய சரக்குகளுடன் புறப்பட்ட மெட்டியுவான் ட்ரோன்.
வங்கதேச தலைநகர் டாக்காவில் நடந்த மகளிர் உலக கோப்பை கபடி போட்டியில், தைவான் அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அந்த மகிழ்ச்சியோடு மைதானத்தை வலம் வந்த இந்திய வீராங்கனையர்.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்துவரும் பலத்த மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் ஏரல் தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்லும் தண்ணீர்..