மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பாபநாசம் அணை வேகமாக நிரம்பி வரும் நிலையில் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் காரையார் பகுதியில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் அரசியல் கட்சி பிரமுகர்களுடன் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் பேசினார்.
சென்னை கவர்னர் மாளிகையில் நடந்த 17வது பழங்குடியினர் இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சியை துவககி வைத்து, சததீஸ்கர் மாநில பழங்குடியின மாணவர்களுடன் பாரம்பரிய இசைக்கு நடனமாடி மகிழ்ந்த தமிழக கவர்னர் ரவி. இடம்: கிண்டி.
வீட்டுக்கு தேவையான பொருட்களை வீட்டிற்கே டோர் டெலிவரி செய்யும் சில நிறுவனங்கள் சீனாவில் உள்ளன. அந்த வகையில், சீனாவில் குவாங்டாங் மாகாணத்தின் ஷென்லென் நகரில் டோர் டெலிவரி செய்ய சரக்குகளுடன் புறப்பட்ட மெட்டியுவான் ட்ரோன்.