மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் முழுமையான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, விரைவு நீதிமன்றம் அமைத்து விசாரிக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் மயிலாப்பூர் மாட வீதியில் போராட்டம் நடத்தினர்.
கோவை லீ மெரிடியன் ஓட்டலில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் உயர்தர பம்புகள் மற்றும் மோட்டார் உற்பத்தி தொழில் மேம்பாட்டுக்காக திறன்மிகு மையங்கள் அமைப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
திருப்பூர் ஆண்டிபாளையம் குளக்கரையில் நடவு செய்யப்பட்டிருந்த பனை மரங்களை, சிலர் வெட்டியுள்ளனர்.அதைப் பார்வையிட்ட வெற்றி அமைப்பின் தலைவர் சிவராம் மற்றும் பனை காக்கும் நண்பர்கள் அமைப்பினர்.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் அகஸ்தியர் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.