குளிர் சீசனை அனுபவிக்க சுற்றுலா தலங்களுக்கு ஏராளமானோர் வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில், தாஜ்மஹால் அருகே உள்ள ஒரு ஹோட்டலின் மொட்டை மாடியில் அமர்ந்து காபியை ருசித்தபடி, அதன் அழகை ரசித்த வெளிநாட்டு சுற்றுலா பயணியர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய நந்திய பகவானுக்கு சந்தனம் அபிஷேகம் நடந்தது.
முழு வீச்சு!மாதவரம் - சிறுசேரி வழித்தடத்தில் மணப்பாக்கம் அருகே மெட்ரோ மேம்பாலத்தில் ரயில் பாதை அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.இடம் : மணப்பாக்கம்
குளிர்பான விளம்பர பலகை முன் ஹாயாக அமர்ந்து விளம்பர மாடல் மங்கைக்கே டப் கொடுத்த மங்கியாரின் சேட்டை... அந்த நொடியில் நம் புகைப்பட கலைஞரின் கேமராவுக்கு நல்ல வேட்டை!. இடம்: உடுமலை, திருப்பூர்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல படிப்பாதை, யானைப்பாதை, மின் இழுவை ரயில், ரோப் கார் ஆகிய வசதிகள் உள்ளன. இதில் ரோப் கார் சேவையின் வருடாந்திர பராமரிப்பு பணி 64 நாட்கள் முடிந்து மீண்டும் துவங்கியது.
மேற்குவங்கம் கொல்கட்டாவில் துர்கா பூஜை விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதையொட்டி அங்குள்ள பந்தல் ஒன்றில் சிவபெருமானையும், பார்வதியையும் குறிக்கும் கங்கவுர் எனப்படும் ராஜஸ்தானிய பாரம்பரிய திருவிழாவை சித்தரிக்கும் ஓவியங்கள் வரைந்த கலைஞர்.